வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள் : ஒரு மணி வரை 39.61% வாக்குகள் பதிவு..!!!

6 April 2021, 1:51 pm
votings - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி வரையில் 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குக்களை செலுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கோடை வெயில் வாட்டி வதைக்கு என்பதால், மக்கள் அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி வரையில் 39.61 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக விருதுநகரில் 41.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நெல்லையில் 32.29 சதவீதமும், சென்னையில் 37.16 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Views: - 48

0

0