சென்னை to கன்னியாகுமரி: தமிழகத்தில் 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!

1 December 2020, 1:35 pm
Quick Share

தமிழகத்தில், சென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், அந்தப் புயலுக்கு ‘புரெவி’ புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. தற்போது திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ, தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் மேலும் புயலாக வலுவடையும். இலங்கையில் நாளை மாலை அல்லது இரவில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக கரை திரும்புவதற்கும் கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க தமிழக அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0