4 மாவட்டங்களை புரட்டியெடுக்கப் போகும் மிக கனமழை : முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..!!

13 November 2020, 12:46 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. அதேபோல, வடதமிழக கடற்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Views: - 49

0

0