சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Author: Babu
10 October 2020, 3:38 pm
rainy-updatenews360
Quick Share

சென்னை : சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, அந்தமான், குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 36

0

0