கடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு… இலங்கை கடற்படையின் வெறியாட்டத்திற்கு பறிபோகும் உயிர்கள்

21 January 2021, 12:28 pm
Boats_Updatenews360
Quick Share

நெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசைப்படகுகளில் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவஷருக்கு சொந்தமான விசைப்படகில், மெசியா, நாகராஜ், சாம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் சென்ற விசைப்படகு நடுக்கடலில் பழுதடைந்ததால், மறுநாள் கரைக்கு திரும்ப வேண்டிய நால்வரும் காணாமல் போகினர். அவர்களை சக மீனவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, நேற்று செந்தில்குமார், சாம் உடல் மீட்கப்பட்ட நிலையில், மெசியா நாகராஜ் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மீனவர்கள் தரப்பில் கூறுகையில், ” பாக்ஜலசந்தி அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள், மீனவர்களின் படகை, கப்பலால் முட்டி சேதப்படுத்தினர். பின்னர், அங்கிருந்து மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, மீனவர்களின் அலறல் சத்தம் எங்களின் சேட்டிலைட் போனில் கேட்டது. சிறிது நேரத்தில் எந்த சத்தமும் கேட்கவில்லை. சேதமடைந்த படகில் இருந்து வெகுதூரம் அவர்களால் பயணிக்க முடியவில்லை,” என்றனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0