மராட்டியத்தில் வீட்டை விட்டு ஓடிச்சென்ற 477 சிறுவர், சிறுமிகள்: ரயில் நிலையங்களில் இருந்து மீட்ட போலீசார்..!!

Author: Aarthi Sivakumar
20 August 2021, 10:07 am
Quick Share

புனே: மராட்டியத்தில் வீட்டை விட்டு ஓடி சென்ற 477 சிறுவர் சிறுமிகளை ரயில்வே நடைமேடை பகுதிகளில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

மத்திய ரயில்வே வெளியிட்டு உள்ள செய்தியில், மராட்டியத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில் வீட்டை விட்டு ஓடி சென்ற 477 சிறுவர் சிறுமிகளை ரயில்வே நடைமேடை பகுதிகளில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதன்படி, மீட்கப்பட்டவர்களில் 310 பேர் சிறுவர்கள். 167 பேர் சிறுமிகள் ஆவர். அவர்களை அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் சேர்த்து உள்ளனர். இவர்களில் பலர் தங்களது குடும்பத்தினரிடம் சண்டையிட்டு விட்டு, அவர்களிடம் எதுவும் கூறாமல் வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இதன்பின்னர் ரயில்வே நடைமேடை பகுதிகள் அல்லது சில நேரங்களில் ரயில்களிலும் சுற்றி வந்துள்ளனர்.

Views: - 142

0

0