தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : உங்க மாவட்டத்தில் எப்படி..?

23 August 2020, 2:51 pm
Mumbai-rain1-updatenews360
Quick Share

தமிழகத்தில் 5 மாவட்டடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

அரபிக்கடலில் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.