5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு.!!

Author: Udhayakumar Raman
24 September 2021, 9:34 pm
TN Assemble 02 updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக அரசு, 1990 பேட்ச்சை சேர்ந்த, ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 5 ஐபிஎஸ் அதிகாரிகளை டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்வு செய்துள்ளது.

  1. சங்கர் ஜிவால் ஐபிஎஸ்,
  2. ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்,
  3. ஆபாஷ் குமார் ஐபிஎஸ்,
  4. டி.வி.ரவிச்சந்திரன் ஐபிஎஸ்,
  5. சீமா அகர்வால் ஐபிஎஸ்,

ஆகிய ஐந்து பேரும் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு டி.ஜி.பி. அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் டி.ஜி.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 154

0

0