தடுப்பூசி முன்பதிவிற்கான ‘கோ-வின்’ செயலி: 50 நாடுகள் ஆர்வம்..!!

Author: Aarthi Sivakumar
29 June 2021, 9:46 am
How To Register For COVID-19 Vaccine On CoWIN AppWebsite
Quick Share

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு பயன்படுத்தப்படும் ‘கோ – வின்’ செயலியை போன்ற தொழில்நுட்பத்தை தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொது சுகாதாரத்திற்கான இரண்டாவது மாநாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர்மட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா பேசியதாவது,

Cowin_UpdateNews360

‘கோ – வின்’ செயலி உருவாக்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே 30 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தடுப்பூசிக்காக அதில் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர். குடிமக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக மாவட்ட அளவில் துல்லியமான உண்மையான தகவல்களை பெற முடியும்.

இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு தேதியில் மாற்றம் மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் நடைமுறையை மிக எளிதாக மேற்கொள்ளலாம் என தொடர்ந்து கூறி வருகிறோம். முன்பதிவு செய்யாமலேயே தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் முடியும். 80 சதவீத மக்கள் அப்படி தான் போட்டுக் கொள்கின்றனர். அவர்களை பற்றிய விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த கோ – வின் செயலியை போன்ற தொழில்நுட்பத்தை தங்கள் நாட்டிலும் நடைமுறைபடுத்த கனடா, மெக்சிகோ, பனாமா, பெரு, உக்ரைன், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வமாக உள்ளன. அவர்களுக்கு இந்த மென்பொருளை இலவசமாக அளித்திட மத்திய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Views: - 201

0

0