#Corona 2022ம் ஆண்டு வரை ஊரடங்கு…! கதிகலங்க வைக்கும் விஞ்ஞானிகளின் பரிந்துரை

21 May 2020, 6:46 pm
Corona_Updatenews360
Quick Share

லண்டன்: கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த 2022ம் ஆண்டு வரை  ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற புதிய முறையை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உலக மக்களை இன்னமும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 50 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர்.

வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டில் தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி 16 நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவில்  இடைவெளிவிட்டு ஊரடங்கை நடைமுறைப்படுத்தப் பரிந்துரைத்துள்ளனர்.

அதாவது முதலில் 50 நாள் ஊரடங்கும், பிறகு 30 நாள் தளர்வும் என மாறி, மாறி நடைமுறைப்படுத்தினால் நோய்த் தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டை 2022ம் ஆண்டு வரை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் சோதனை, தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றை தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைப் பின்பற்றினால் வேலையிழப்பையும், நிதிச் சிக்கலையும் தவிர்க்க முடியும் என்றும் யோசனை கூறி இருக்கின்றனர்.

Leave a Reply