பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் : திமுக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
11 February 2023, 8:57 am
Quick Share

திமுக பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்ததில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை, வலையங்குளம் பகுதியில் அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 10,000 பேர் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர். சரவணன் தலைமையில் 10,000 நபர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இணைப்பு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நன்றி அதிமுக எழைகளுக்கு உதவி செய்யும் கட்சி. திமுக குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. Commission, corruption, correction திமுக உள்ளது. திமுக அரசு 90% அறிவிப்பை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர். திமுக 520 வாக்குறுதிகளை வெளியிட்டத. அதில், 90% இன்னும் செயல்படுத்த வில்லை. திமுக அமைச்சர்கள் பொய் கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி ஊழலை பற்றி பேசக் கூடாது என கூறுகின்றனர். திமுக ஊழலின் உற்றுக்கண் ஆக உள்ளது. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான். திமுகவில் ஆட்கள் இல்லை. திமுகவில் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான்.

திமுகவிற்கு உழைத்தவர்கள் வயது முதிர்ந்து இருக்கின்றனர். திமுக நம்மை பற்றி பேச அருகதையில்லை. அதிமுக 33 ஆண்டுகளாய் ஆட்சி செய்தது. ஏழைகள் உயர்வு, கல்வி முன்னேற்றம் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. கடந்த 2011 திமுக ஆட்சியில் 100க்கு 32 பேர் உயர்கல்வி படித்த நிலையில் அதை 100க்கு 52 பேர் உயர்கல்வி படிக்கின்றனர்.

பல உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில் தான், மதுரையில் பல திட்டங்களை திமுக முடக்கியுள்ளது. மதுரையில் வைகை ஆற்றில் இருபுறமும் சாலைகள் அமைப்பது முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் உருவாக்கி திட்டத்தில் சிலவற்றை தான் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்து வருகிறார்.

அதிமுக தை பொங்கலுக்கு 2500 கொடுத்தோம், தற்போது 1000 போராடி பெற வேண்டியதாக இருக்கிறது. கரும்பு தர மறுத்தனர். அதையும் போராடி பெற வேண்டி இருந்தது. இதற்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள், கவர்ச்சி திட்டம் அறிவித்து திமுக மக்களை ஏமாற்றுகின்றனர்.

அதிமுக பொங்கலுக்கு ரூ.2500 கொடுக்கும் போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது கூறினார்கள். தற்போது முதல்வராக இருந்து கொண்டு ரூ.5000 கொடுக்க வில்லை. திமுக கடந்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வெளி மாநிலத்திலிருந்து கொடுத்தனர். அதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது.

பொங்குல் தொகுப்பில் சர்க்கரை கரைந்து ஓடியது, புளியில் பல்லி, அரிசியில் வண்டு இருந்தது. நமது மாநிலத்தில் பொருட்களை வாங்கினால் ஊழல் செய்ய முடியாது. அதனால் வெளி மாநிலத்தில் இருந்து பொருட்கள் வாங்கினார்கள்.

சொத்து வரி, சாக்கடை வரி, மின்சார வரி பல மடங்கு உயர்த்தியுள்ளனர். கொரோனா தொற்றில் மதுரையில் அதிமுகவினர் சிறப்பாக செயல்பட்டார்கள். அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு மருத்துவ வசதிகள் என அனைத்து சிறப்பாக செய்தனர். டாக்டர் சரவணன் சிறப்பாக செயல்பட கூடியவர். அவருடன் அனைவரும் ஒன்று இணைந்து அதிமுகவை வளர்க்க வேண்டும், என கூறினார்.

Views: - 348

0

0