மீத்தேன் எதிர்ப்பு, 8 வழிச்சாலை போராட்டம் உட்பட 5570 வழக்குகள் வாபஸ் : தமிழக அரசு அரசாணை..!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 9:46 am
5570 Case Withdraw- Updatenews360
Quick Share

குடியுரிமை திருத்தச் சட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட 5570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 24.06.2021 அன்று ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பத்திரிகை மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுதல், மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள், மீத்தேன்/நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டு வழிச்சாலை ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர்களின் மீதான 5570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Views: - 108

0

0