6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

15 September 2020, 1:20 pm
Cbe Rain - Updatenews360
Quick Share

சென்னை : கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ஆந்திர கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இது அடுத்த 2 நாட்கள் வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதால், தமிழகத்தில் மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பெய்யக்கூடும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திர கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 7

0

0