மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கு: தமிழகத்தை சேர்ந்த 6 கூலித்தொழிலாளர்கள் கைது!!

Author: Aarthi Sivakumar
28 August 2021, 2:04 pm
Quick Share

மைசூரு : கர்நாடகாவின் மைசூரில் எம்.பி.ஏ., மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகள் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என சந்தேகிப்படுகிறது.

மைசூரில் எம்.பி.ஏ. படித்து கொண்டிருந்த 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன் கடந்த 24ம் தேதி இரவில் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற ஆண் நண்பரையும் கொடூரமாக தாக்கியுள்ளது அந்த கும்பல்.

படுகாயமடைந்த இருவரும் மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பகிரங்கமாக துாக்கிலிடும்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவியின் ஆண் நண்பர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நடை பயிற்சிக்காக மாலையில் மலை அடிவாரத்திற்கு அந்த மாணவியுடன் சென்றேன். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பல் கற்கள், உருட்டு கட்டைகளால் என்னை தாக்கினர். மாணவியையும் தாக்கி, ஒருவர் பின் மற்றொருவராக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதை மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர். பின், என் தந்தைக்கு போன் செய்து ஆன்லைன் வாயிலாக 3 லட்சம் ரூபாய் அனுப்பும்படி மிரட்டல் விடுத்தனர். தந்தை ஒப்புகொள்ளாததால் என்னை அதிகமாக தாக்கினர். நாங்கள் மயக்கமடைந்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் என பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பர் போலீசிடம் கூறியுள்ளார். குற்றம் நடந்த பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க் மூலம் கொடூர குற்றத்தை செய்தவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

விசாரணையில், குற்றவாளிகள் திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேரை மைசூர் போலீசார் கைது செய்துள்ளனர். சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதி அருகே சூசையபுரத்தை சேர்ந்த பூபதி என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 5 கூலித்தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மைசூரில் இருந்து திருப்பூருக்கு செல்லும் போது, மது அருந்துவதை குற்றவாளிகள் வழக்கமாக வைத்துள்ளதாகவும், மேலும், தனிமையில் இருக்கும் பெண்கள், காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 361

0

0