6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் : காவலுக்கு இருந்த மற்றொரு ஆசிரியர்!!

11 June 2021, 6:27 pm
banda_rape_updatenews360
Quick Share

6ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

ஜோத்பூர் மாவட்டத்தில் மொகம்காரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவியை அப்பள்ளியின் ஆசிரியர் சுர்ஜாராம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மற்றொரு ஆசிரியரான சாஹி ராம் வெளியே காவல் இருந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் வெளிச்சத்து வந்தது. இதையடுத்து, சிறுமி கர்ப்பமானது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து, கல்வித் துறை ஆசிரியர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்து, அவர்கள் இருவருக்கும் எதிராக துறை ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாதிக்கபட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் அனைத்தும் ராஜஸ்தான் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் சங்கீதா பெனிவால் தெரிவித்தார்.

Views: - 197

0

0

Leave a Reply