அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்..ஆனா ஒரு கண்டிஷன் : உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறுவது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 11:00 am
Chennai HC -Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 %இடஒதுக்கீடு வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Views: - 846

0

0