தமிழகத்திற்கு 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள்: ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்தது..!!

4 May 2021, 11:20 am
covaxin vaccine - updatenews360
Quick Share

சென்னை: கொரோனாவின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஐதராபாத்திலிருந்து 75,000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஆகியவை பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது.

முன்னதாக பிரேசில், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Views: - 55

0

0