சபரிமலையில் 39 நாட்களில் ரூ.9 கோடி வருமானம்: கடந்த ஆண்டு இதேநாளில் ரூ.156 கோடி

26 December 2020, 11:21 pm
sabarimala-updatenews360
Quick Share

சபரிமலையில் 39 நாட்களில் ரூ.9 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் வாசு சபரிமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த மண்டல காலத்தில் நடை திறந்து 39 நாட்களில் இதுவரை 71 ஆயிரத்து 706 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நாட்களில் மொத்தம் ரூ.9 கோடியே 9 லட்சத்து 14 ஆயிரத்து 893 வருமானம் கிடத்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.156 கோடியே 60 லட்சத்து 19 ஆயிரத்து 661 கிடைத்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5 சதவீதம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வந்துள்ளனர்.

இதுவரை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் 26ம் தேதிக்கு பின்னர் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த பரிசோதனைக்கு கட்டணம் அதிகம். மேலும் பரிசோதனை முடிவு கிடைக்க தாமதமாகும். இந்த விபரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை இல்லாமல் ஆர்டி லேம்ப், எக்பிரஸ் நாட் பரிசோதனையும் நடத்தலாம். தரிசனத்திறகு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தேவஸம்போர்டின் விருப்பம். ஆனால் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் உயர்நீதிமன்றம் மற்றும் கேரள அரசின் அறிவுரைப்படி மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு வரை தரிசனத்திற்கு முன்பதிவு முடிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 3

0

0