பட்டியல் சமூகத்தின் துரோகி திருமாவளவன்.. இதுவரையில் ரூ.2,000 கோடி சொத்து சேர்ப்பு : ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் பகீர் குற்றச்சாட்டு.!!!

Author: Babu Lakshmanan
26 October 2021, 4:47 pm
thiruma - udpatenews360
Quick Share

பட்டியல் இன சமூகத்திற்கு துரோகம் செய்து இதுவரை சுமார் 2,000 கோடி வரையிலான சொத்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சேர்த்து வைத்துள்ளதாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி என்றாலே, ஒரு குறிப்பிட்ட மதம், சாதி மற்றும் சமூகத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி, பட்டியலின மக்களுக்கான கட்சி என்று சொல்லி வருபவர் விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன். பட்டியலின மக்களின் பாதுகாவலன் என்றும் பெரும்பாலான இடங்களில் அவர் அடிக்கடி கூறியும் வந்துள்ளார்.

ஆனால், தற்போது அங்கம் வகிக்கும் கூட்டணியான திமுக, பட்டியலின மக்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் மட்டும், அதனை தோழமை சுட்டுதலின் மூலம் மட்டுமே திருமாவளவன் கண்டிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் இதுவரையில் எந்தவிதமான பதிலோ, விளக்கமோ கொடுத்ததில்லை.

இந்த நிலையில், பட்டியல் இன சமூகத்திற்கு துரோகம் செய்து இதுவரை சுமார் 2,000 கோடி வரையிலான சொத்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சேர்த்து வைத்துள்ளதாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராசன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :- திமுக ஆதரவு அமைப்புகளாக 25க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்து வருகின்றன. தலீத்துகளின் தலைவர் என்று சொல்லப்படுகிற திருமாவளவன், அவரது சொந்த சாதிக்கும் துரோகம் செய்வார். இருக்கக்கூடிய பட்டியல் சமூகத்திற்கும் துரோகம் செய்வார். திமுக உள்ளிட்ட கிறிஸ்துவ இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று, இதுவரையில் ரூ. 2000 கோடி சொத்து சேர்த்துள்ளார். தலீத்துகளுக்கென்று திருமாவளவன் எதையும் செய்யவில்லை. பட்டியலின மக்களின் துரோகி திருமாவளவன்.

மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிமுக கைப்பற்றி விட்டது. அருந்ததியினர் மக்கள் வாக்களித்துதான் இப்படியொரு வெற்றியை அதிமுகவுக்கு கொடுத்துள்ளனர். இதன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, அருந்ததியினர் மக்கள் மீது திமுக அரசு வன்மத்தை புகுத்து வருகிறது. எந்தவொரு புதிய திட்டத்தையும் திமுக அரசு அறிவிக்கவில்லை. முந்தைய அதிமுக அரசு அறிவித்த திட்டங்களையே ஸ்டாலின் இப்போது செயல்படுத்தி வருகிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 312

0

0