50 வயது ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் விலக்கா..? : அமைச்சர் செங்கோட்டையன் பதில்..!

26 September 2020, 1:49 pm
Sengottaiyan - updatenews360
Quick Share

ஈரோடு : கொரோனா பரவல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் விலக்கு அளிக்கப்படுகிறதா..? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொதுத்தேர்வு எழுத இருப்பதால், மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை போக்கிக் கொள்வதற்காகவே, 10, பிளஸ் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், விருப்பத்தின் பேரில் அக்.,1ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவி வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை மட்டும் முடிவெடுக்க முடியாது. சுகாதாரத்துறை, வருவாய் துறைகளுடனும் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

கொரோனா தாக்கம் இருப்பதால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில் விலக்கு அளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார், எனத் தெரிவித்துள்ளார்.