அரசியலில் என்ட்ரி கொடுக்கிறாரா நடிகர் கார்த்தி…? வைரலாகும் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 10:17 am
Quick Share

மதுரை : நடிகர் கார்த்தியின் பிறந்த நாளையொட்டி மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீட் தேர்வு எதிர்ப்பு உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்களுக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்தார். அப்போது, அவருக்கு ஆதரவுகள் குவிந்தன. ஆனால், கடந்த சில மாதங்களாக எந்தவொரு அரசியல் விவகாரங்களுக்கோ அல்லது சமூக பிரச்சனைகளுக்கோ நடிகர் சூர்யா குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார். இது, கடுமையான விமர்சனங்களை எழச் செய்தது.

அதாவது, அதிமுக ஆட்சியின் போது குறைகளாக சுட்டிக்காட்டிய சூர்யா, திமுக ஆட்சியின் போது ஓடி ஒளிந்தது ஏன்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் மீதான விமர்சனங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், அவரது சகோதரரும், நடிகருமான கார்த்திக்கின் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி, தனது அசாத்திய நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்தார். அடுத்தடுத்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்த அவர், தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Ponniyin Selvan is 70% complete – Karthi gives out exciting updates - Only  Kollywood

மே 25ம் தேதி நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி, மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் கார்த்தி தலைமைச்செயலகம் முன்பு நிற்பது போலவும், அதன் வலது பக்கம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் என இரு அரசியல் ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதில், அரசியல் வசனங்களள் ஏதும் இடம்பெறாவிட்டாலும், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படம் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் புகைப்படங்களை ரசிகர்கள் இடம்பெறச் செய்தது ஏன்..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொருளாளர் பதவி வகித்து வரும் கார்த்தி, அரசியலிலும் நுழையப் போகிறாரா..? என்று கேள்வி எழுந்துள்ளது.

Image

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக பிரதிபலித்து வரும் நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தில் இருந்து யாரேனும் அரசியலுக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த போஸ்டர்களால் கார்த்தி தான் அந்த நபரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 708

0

0