பிரதமருக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து..! சவாலான மனிதருக்கு மேலும் வலிமை கிடைக்க விருப்பம்!!

17 September 2020, 3:22 pm
rajini - modi - updatenews360
Quick Share

சென்னை : 70வது பிறந்த நாளை கொண்டாடி வரும் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் செப்.,14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்து செய்தியில், ” மரியாதைக்குரிய நரேந்திர மோடி ஜி, சவாலான இந்த நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை பெருக வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.