முதலமைச்சர் எடப்பாடியாரின் தாயின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!!

Author: Babu
13 October 2020, 12:06 pm
eps - rajini -- updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை காலமானார்.

தகவல் அறிந்ததும் காரில் சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, சடங்குகளுக்கு பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தாயாரை இழந்து வாடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.

இதேபோல, பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 36

0

0