நீட் விவகாரம் : அன்று அப்படி… இன்று இப்படி… சித்தார்த்தை கலாய்த்த நெட்டிசன்கள்!!!

By: Babu
15 September 2021, 3:40 pm
Siddharth cover - updatenews360
Quick Share

நீட் தேர்வுக்கு எதிராக, குரல் கொடுத்த நடிகர்களில் அஞ்சாத சிங்கங்கள் என்று வர்ணிக்கப்படும் சூர்யா சித்தார்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் மிக முக்கியமானவர்கள். கடந்த 4 வருடங்களாக குறிப்பாக கடந்த மே மாதத்துக்கு முன்பு வரை தமிழக மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பு என்றால் இவர்கள் கொந்தளிப்பது வழக்கம். இதனால் இவர்களுக்கு திரையுலக சமூகப் போராளிகள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

டுவிட்டர் அரசியல்

அதுவும் சித்தார்த் எல்லோரையும் முந்திக்கொண்டு டுவிட்டர் பதிவுகள் மூலம் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார். அவருடைய அந்த அதிரடி, அடுத்த நிமிடமே சமூக ஊடகங்களில் வைரலாகி விடும். சில தனியார் செய்தி சேனல்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரளயத்தையே ஏற்படுத்தும்.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!” என ட்வீட் போட்டார்.

உத்தரபிரதேச மாநில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததை குறிப்பிட்டு அவர் இப்படி ட்வீட் செய்து இருந்தார்.

அடுத்த 2 நாட்களில் அதாவது, மே 1-ம் தேதி “தடுப்பூசி எங்கேடா?” என்று பதிவிட்டு பாஜகவை கடுப்பேற்றினார். அது மறைமுகமாக பிரதமர் மோடியை தாக்குவதாக இருந்ததால் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

‘கன்னத்தில் அறைவேன்’ : வந்த வம்பு

அரசியலைப் பொறுத்தவரை, ஒரு வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. அதுதான் தற்போது சித்தார்த்துக்கு, பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர் தற்போது பெட்டிப் பாம்பாக ஆகி விட்டார் என்கிறார்கள்.

உத்தரபிரதேச முதலமைச்சர் பொய் சொன்னால் அறைவேன் என்று அவர் சில மாதங்களுக்கு முன்பு, போட்ட ட்வீட்டை வைத்து ஒருவர் சித்தார்த்தின் ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

UP_CM_Yogi_UpdateNews360

அதில், “நீட் தேர்வை முதல் சட்டப் பேரவை கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி. இன்று நீட் நடக்கிறது. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் –
ஐயா சித்தார்த் என்ன பண்ணப் போறீங்க?” என்று கிடுக்குப்பிடி போட்டிருந்தார்.

இது சித்தார்த்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவருக்கு காட்டமாக பதில் அளித்தார். சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மூதேவி. கோபமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன கேளு. நான் என் வேலையைதாண்டா பாக்கறன். பொறுக்கி. இதுவே வேலையா போச்சு. டுவிட்டரை டாய்லட்டாக்கி வச்சிருக்காங்க. வேற எங்கே மலரும். சாக்கடையில்தான் மலரும். எழவு. இந்தில சொல்லட்டா?” என்று கோபமாக வெடித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சித்தார்த் ட்விட்டரில் ஏதாவது காரசாரமாக பதிவிட்டால் அதை உடனடியாக நூற்றுக்கணக்கானோர் ரீட்வீட் செய்து விடுவார்கள். அவருக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவிப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அவர் எதிர்பார்த்தது, நடக்கவில்லை. அவருக்கு ஆதரவாக யாரும் வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்கவும் இல்லை. மாறாக, சித்தார்த் பயன்படுத்திய வார்த்தைகளை வைத்தே அவரை நெட்டிசன்கள் கலாய்த்தும் வறுத்தெடுத்தும் வருகின்றனர்.

நடுரோட்டுல ஓட விட்டுருவாங்க

அந்த பதிவுகளில் சிலவற்றை பார்ப்போம்.

நீ நாட்டின் பிரதமர் கருத்துக்களை கொச்சைப்படுத்தும்போது, உன்னை அடுத்தவங்க உண்டில்லைன்னு பண்ணக்கூடாதா? நடிக்காதே…

நீ இப்ப மட்டும் அவர அறைவேன்னு சொல்லிப்பாரு..உண்மையா வே உன்ன நடுரோட்டுல அம்மணமா ஓட விட்டிருவாங்க..எங்க அடி விழாதோ அங்க மட்டும் வாயவிடுறதுதான கூத்தாடிகள் பழக்கம்.

“தம்பி! அதிமுக, உபி அரசுகளுக்கு எதிராகவும், மத்திய அரசை எதிர்த்தும் நீங்கள் குரல் கொடுத்தபோது உங்களை உண்மையான சமூகப்போராளி என்று நம்பினேன். ஆனால் இப்போது நீங்கள் மௌனம் சாதிப்பதை பார்த்தால் குறிப்பிட்ட ஒரு கட்சியின் அஜெண்டாவை நிறைவேற்றுவதற்காக செயல்பட்டு உள்ளீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் எதை விதைத்தீர்களோ, அதுவே முளைத்திருக்கிறது. உங்களது பதில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை கோபமோ, சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன கேளு” என்று நெருப்பை உமிழ்ந்து இருப்பதன் மூலம் நீங்கள் ஒரு நாலாந்தர மனிதராகவே தென்படுகிறீர்கள் “என்று ஒருவர் நறுக்கென்று குட்டு வைத்துள்ளார்.

வேலை வெட்டி இருக்குறவன் இல்லாதவன்னு உனக்கு தெரியுமா… ஏன் நீயா பேசி offend ஆகுற…. அரசியல் பேசுனா கேள்விகள் வரத்தான் செய்யும் மாமே. பதில் சொல்லுங்க… அதிமுக ஆட்சில மூச்சு விடாம பேசுனீரு… முதலமைச்சரை கேள்வி கேட்பீங்களா, மாட்டீங்களா?…

சிலர் போடுற எலும்பு துண்டுக்கு குரைக்குற நாய் தான நீ! நீயெல்லாம் மனுஷன் கிடையாது. சோத்துக்கு வாலாட்டும் தெரு நாய், ஆனா சுய குறிப்பில் நாகரிக மனிதன்னு போட்டிருக்க. போலியான செய்தி பரப்பும் நீயெல்லாம் நாகரிகம் பத்தி பேசலாமா? மூடிட்டு கிளம்பு.

எகிறி குதித்தேன்.. மூக்கு உடைந்தது.! காதுகள் இரண்டும் செவிடு ஆனது..! டிவிட்டர் முழுக்க இறங்கி வாயை விட்டு..வாழ்க்கை போனது..! அலே..அலே..அலே..அலே..! அலே..அலே..அலே..அலே..அலே..!அலேய்..! – இப்படிக்கு பாசத்திற்குரிய பாய்ஸ் நாயகன்.

இதில் ஒரே ஒருவர் மட்டும் சித்தார்த்துக்கு ஆதரவாக, “அண்ணே இவங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீங்க. இப்போ நீங்க பதில் சொன்ன நாளைக்கு அவங்க பெரிய ஆள் ஆகி விடுவாங்க. அதனால கண்டுக்காம விட்டுருங்க” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

இன்னொருவர், ஒரு படத்தில் காதலன் பாடுவான்,”ஒரு பொய்யாவது சொல் கண்ணே! “நேசிக்கிறேன். அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ! இந்த ஃபார்முலாவை திமுக சரியாக பயன்படுத்தி கொண்டது” என்று கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக குறிப்பிட்டிருக்கிறார்.

இது நாகரீகமல்ல

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நடிகர் சித்தார்த் தற்போது தமிழக நிகழ்வுகள் குறித்து அதிகமாக டுவிட் செய்வதில்லை. அதற்கான காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர் யாருக்கு ஆதரவாக வேண்டுமென்றாலும் செயல்பட்டு விட்டுப் போகட்டும். ஆனால் அவர் பொய் சொன்னா யாராக இருந்தாலும் அறைவேன் என்று கூறியதை சுட்டிக்காட்டும்போது. இப்படி ஆவேசமாக பேசி இருக்க வேண்டியதில்லை. குறிப்பாக கருத்தை பதிவு செய்தவரிடம் “உங்கப்பன கேளு” என்கிறார். இவர்கள் இருவருக்குமான பிரச்சனையில் கருத்தை பதிவிட்டவரின் தந்தையை எதற்காக சித்தார்த் வம்புக்கு இழுக்கிறார். நாகரீகமான ஒருவர் செய்யும் செயல் இதுவல்ல. மிகவும் பலவீனமானவர்கள்தான், இப்படி சம்பந்தமில்லாமல் மூன்றாம் நபரை இழுப்பார்கள்.

Actor Siddarth- updatenews360

அதனால் இவருக்கு பொய் சொன்னவர்களிடம் அதை தட்டி கேட்க திராணி இல்லை என்று அர்த்தம் ஆகிறது. தன்னை தற்காத்துக்கொள்ள ஆம், எனக்கு பிடித்தவர்களைத்தான் ஆதரிப்பேன், பிடிக்காதவர்களை எதிர்ப்பேன் என்று கூட சொல்லி விட்டுப் போய் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் தன்னை ஒரு சமூகப் போராளி என்று அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டு இப்போது தமிழக நிகழ்வுகள் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்தால் இப்படித்தான் கேள்விகள் எழும். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பார்கள். அதுதான் நடிகர் சித்தார்த் விஷயத்திலும் நடந்திருக்கிறது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 152

0

0

Leave a Reply