எஸ்.பி.பி.யின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி!! (புகைப்படங்கள் உள்ளே)

26 September 2020, 12:24 pm
Quick Share

திருவள்ளூர் : உடல்நலக்குறைவால் காலமான பாடகர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில், நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிர் பிரிந்தது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று நள்ளிரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாயப் பண்ணைக்கு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டது.

vijay- updatenews360

இன்று காலை முதல் அவரது உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், மகன் எஸ்.பி.பி. சரண் மற்றும் குடும்பத்தினர் இறுதிச் செய்தனர். இதைத் தொடர்ந்து, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள அடக்கம் செய்யப்படும் இடம் வரையில் அவரது உடலின் இறுதி யாத்திரை நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய், எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரியமானவளே திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு எஸ்.பி.பி. தந்தையாக நடித்ததுடன், அவரது படங்களில் பல்வேறு பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.