தந்தையின் கட்சிக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை : நடிகர் விஜய் அதிரடி..!!!

5 November 2020, 7:14 pm
actor vijay - updatenews360
Quick Share

சென்னை : அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்னும் பெயரில் அரசியல் என்னும் பெயரில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சி தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவலை அவரது மக்கள் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்னும் பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தது உண்மைதான் என நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தந்தையின் கட்சிக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- இன்று என்‌ தந்‌தை திரு.எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌ அவர்கள்‌ ஓர்‌ அரசியல்‌ கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின்‌ வாயிலாக அறிந்தேன்‌. அவர்‌ தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்,‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடர்பும்‌ இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும்,‌ பொதுமக்களுக்கும்‌
தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இதன்‌ மூலம்‌ அவர்‌ அரசியல்‌ தொடர்பாக எதிர்காலத்தில்‌ மேற்கொள்ளும்‌ எந்த நடவடிக்கைகளும்‌ என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்‌. மேலும்‌ எனது ரசிகர்கள்‌, எனது தந்‌ைத கட்சி ஆரம்பித்துள்ளார்‌ என்பதற்காக தங்களை அக்கட்சியில்‌ இணைத்துக்கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌. அக்கட்சிக்கும், நமக்கும்,‌ நமது இயக்கத்திற்கும்‌ எவ்வித தொடர்பும்‌ கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மேலும்‌ என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்பதையும்‌
தெரிவித்துக்கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0

1 thought on “தந்தையின் கட்சிக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை : நடிகர் விஜய் அதிரடி..!!!

Comments are closed.