நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா உள்பட மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் : சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

22 June 2021, 11:53 am
assembly - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் 16வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர் வெளியிட்டார். குறிப்பாக, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

இதைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியதும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார். பின்னர், சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை திமுக உறுப்பினர் உதயசூரியன் முன்மொழிந்தார்.

Views: - 75

0

0