நடிகர் விவேக் மறைவிற்கும் தடுப்பூசிக்கும் முடுச்சு போடாதீங்க : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்..!!

17 April 2021, 5:39 pm
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் விவேக்கின் மரணத்தையும், கொரோனா தடுப்பூசியையும் இணைக்க வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலகங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் விருகம்பாக்கம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் மரணத்தையும், கொரோனா தடுப்பூசியையும் இணைக்க வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்ட போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, அரசின் மீதும், மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

Views: - 29

0

0