தேவதாசி எனத் திட்டிய நபர்…’தாத்தாவிற்கு தப்பாத பெரியார் பேரன்’… சளைக்காமல் பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி..!!

Author: Babu Lakshmanan
21 February 2022, 11:36 am
kasthuri - updatenews360
Quick Share

சமூக வலைதளத்தில் தன்னை தேவதாசி எனத் திட்டிய பெரியார் ஆதரவு கொள்கை கொண்ட நபருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமாக இருப்பவர் கஸ்தூரி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களின் குற்றம் மற்றும் குறைகளை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டி வருகிறார். இதனால், இவர் கடும் விமர்சனங்களை எதிர்கொள்வது வழக்கமாகும்.

தற்போது, இந்தியாவில் ஹிஜாப் விவகாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்திற்கு தமிழகத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் ஹிஜாப் அணியத் தடைவிதிக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் நிர்வாகி வன்னியரசு, “விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில் வருகிறது. எழுச்சித் தமிழர் திருமாவளவன் முதலமைச்சராகும் காலத்தை தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. அப்போது, தமிழகததில் பூணூல் அணிய தடை விதிக்கப்படும். சனாதன ஒழிப்பின் முதல்பணி அதுவே, எனக் குறிப்பிட்டிருந்தார்.

வன்னி அரசின் இந்தப் பதிவை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி பதில் அளித்திருந்தார். அதில், “என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு. உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலி ஆடுகளாக்க வேண்டாம்,” எனக் கூறினார்.

இதற்கு வன்னி அரசு கேள்வி எழுப்பி பதில் அளித்திருந்தார். அவர் கூறியதாவது :- பூணூல் என்று சொன்னவுடனே எதற்காக இந்த பதற்றம்? பூணூல் என்பது இந்து மத அடையாளமா? அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டுமான அடையாளமா? ஹிஜாப் மத அடையாளம் என்றால், பூணூல் என்ன அடையாளம்?, எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி, “பதற்றம் உமக்கு தான் நண்பரே. ரெட்டி பெயரை சொன்னதற்கே உமக்கு பெரும் சங்கடமாகி விட்டது. உங்களுக்கும் கட்சிக்கும் இரந்துதவி பெற்ற இந்துக்களையும் ஆன்மீகவாதிகளையும் பட்டியலிட்டால் ? (உங்கள் பாணியில் சொன்னால் ஆரிய வந்தேறி இந்து மதவாதிகள்) பூணூல் அந்நிய மதங்கள் அடியெடுத்து வைக்குமுன் பண்டைய இந்திய வழக்கம். சங்கத் தமிழ்ச்சமூகத்திலும் உண்டு. பூணூல் ஒரு மதத்துக்கோ ஒரு ஜாதிக்கோ மட்டும் சொந்தமில்லை. இதற்கு சிறந்த சான்று ராகுல்காந்தி. கேளுங்கள் அவரை – பூணூல் அணியும் அவர் எந்த மதம், மொழி,எந்த இனம், எந்த ஜாதி என்று.

பல சமூகங்கள் அணியும் பூணூல் என்றால் என்ன, எந்தெந்த சமயத்தினர் பூணூல் அணிகின்றனர், தமிழகத்தில் வழக்கொழிந்த வரலாறு, அதன் பின் உள்ள அரசியல் போன்ற தகவல்களை விரைவில் விரிவாக பதிவிடுகிறேன். ஹிஜாப் பிரச்சினையை ஆக்கப்பூர்வமாக அணுகுங்கள். அதைவிடுத்து இந்துவிரோத போக்கை எடுப்பது வீண், என்று கூறி அதிரடி காட்டினார்.

கஸ்தூரியின் இந்தக் கருத்துக்கு வன்னி அரசு அளித்த பதிலாவது, “இந்து பாரம்பரியமா? வெள்ளையர்களுக்கு பிறகு உருவானதா? அல்லது அதற்கு முன்பா? அப்படியானால் பூணூல் அடையாளம் தலித்களுக்கு இல்லாத து ஏன்? இதை பாரதியே கேட்டாரே? இந்தியச்சமூகமா? அப்படி ஒன்று இருக்கிறதா? பெண்களுக்கு மட்டும் பூணூல் மறுக்கப்படுவது ஏன்? (பார்ப்பன பெண்கள் உள்ளிட்டோரும்),” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த கஸ்தூரி, “அப்போ இதை பத்தி எதுவுமே தெரியாமத்தான் இவ்ளோ tweets ஆ? வெறுப்பு பிரச்சாரமா? நான் கேட்ட கேள்வி எதுக்குமே பதில் இல்லை… சங்கடத்திலிருந்து தப்பிக்க இந்துக்களை திசைதிருப்பி பிரித்தாளும் முயற்சி. இதை மட்டும்தான் பெற்றீரா அம்பேத்கரிடம் இருந்து? சரியாக படியுங்கள். இந்தியாவின் பல சமூகங்கள், தமிழர் உட்பட என்று குறிப்பிட்டுள்ளேன். இதற்கே அதிர்ச்சியானால், வள்ளுவன் அணிந்த பூணூலை பேசினால் உங்கள் நிலைமை? ஆண்களுக்கு பூப்பூக்கல்யாணம் இல்லை, பெண்களுக்கு பூணூல் இல்லை. இந்து பாரம்பரியத்தை மதிக்க இந்துவிரோதிகளுக்கு மனமில்லை.,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கஸ்தூரியின் இந்தக் கேள்விக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், விசிக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில், சில் வண்டு என்ற பெரியார் கொள்கை கொண்ட ஐடி-யை பயன்படுத்தும் நபர், கஸ்தூரியை பெண் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளில் பேசியிருந்தார். அதாவது, “சங்கத் தமிழ் சமூகத்தில் பூணூல் இருந்ததுக்கான ஆதாரம் இருந்தால் காட்டிட்டு பேசு. நீ இப்பவும் பண்ற தொழில்தான் பண்டைய தமிழ் சமூகத்தில் தேவதாசி முறையாக இருந்தது. என்ன அப்போ காசு கொடுக்காம போனாங்க. இப்போ நீ பிக்ஸ் பண்ற அவ்ளோ தான்,” என கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த கஸ்தூரி, “தாத்தாவிற்கு தப்பாத பெரியார் பேரன். வாழ்க பெண்ணியம். வாழ்க கண்ணியம். இந்த பீடைகள்தான் ஹிஜாப் பெண்ணுரிமை என்று கொடி பிடிப்பவர்கள். ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய்கள். இவர்களை நம்பினால் எந்த பெண்ணுக்கும், எந்த மதத்திற்கும் விடியாது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு பலர் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 1006

0

0