இயக்குநர் முதல் இன்ஸ்பெக்டர் வரை…. பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் 14 பேர் கொண்ட லிஸ்ட்… நடிகையின் அதிர்ச்சி புகார்..!!

17 June 2021, 8:54 pm
Quick Share

தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயக்குனர் முதல் இன்ஸ்பெக்டர்வரை 14 பேர்களின் பெயரை நடிகை ரேவதி சம்பத் வெளியிட்டுள்ளார் .

கடந்த சில நாள்களாகவே மீ டூ குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதில் மலையாள நடிகை ரேவதி சம்பத் தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என ஒரு நீண்ட லிஸ்ட்டை தன்னுடைய முகநூலில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தென்னிந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்ட ரேவதி சம்பத், 2019-ல் `பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் ரேவதி சம்பத் தனக்கு உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துன்புறுத்தியவர்கள் என 14 பெயர்கள் அடங்கிய பட்டியலை தனது முக்ப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகர் சித்திக்கும் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளின் லிஸ்ட் என 14 நபர்களின் பெயர்களை நம்பர் போட்டு குறிப்பிட்டிருக்கிறார் ரேவதி சம்பத். அதில் நடிகர் சித்திக், ரேவதியின் முதல் படமான பட்னாகர் படத்தின் இயக்குநர் ராஜேஷ் தொச்சிவர், ஆஷிக் மஹி, நடிகர் சிஜூ, கேரள ஃபேஷன் லீகின் ஃபவுண்டர் அம்ஹில் தேவ், டாக்டர் அஜய் பிரபாகர், குறும்பட இயக்குநர் மேக்ஸ்வெல் ஜோஸ், விளம்பரப் பட தயாரிப்பாளரான ஷனூப் கர்வத், நடிப்பு சொல்லித்தந்த காஸ்ட்டிங் டைரக்டர் ரெஜந் பாய், வங்கி ஏஜென்ட் சருன் லியோ, சப் இன்ஸ்பெக்டர் பினு உள்ளிட்ட பெயர்களை அந்த லிஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த பட்டியலில் எம்.எஸ்.பதுஷும் நந்து அசோகனும் என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள்,

சவுரப் கிருஷ்ணன் இணையத்தில் என்னைக் கேலி செய்தவர் என ஒரு சிலரை `குறிப்பிட்டிருக்கிறார் ரேவதி. நடிகர் சித்திக் மீது கடந்த 2016-ஆம் ஆண்டே ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இப்போதுள்ள பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சிலர் நடிகை ரேவதி சம்பத் இதை விளம்பரத்திற்காக பண்ணிருக்கிறார் என்றும், வேறு சிலர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 311

0

0