அக்.,6ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர உத்தரவு : சூடுபிடிக்கும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்..!!

Author: Babu
2 October 2020, 12:39 pm
Admk Executive- Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய நாள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வருமாறு தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முதலமைச்சர் வேட்பாளராக விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்காக, அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.ஸை தனித்தனியே சந்தித்து பேசியும் வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 6ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கட்சியில் பிளவின்றி, ஒருமித்த கருத்தாக முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 46

0

0