ஜன.,22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம்
19 January 2021, 8:27 pmசென்னை : வரும் 22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என அதிமுக முழு பிஸியாக இருந்து வருகிறது. இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வரும் 22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. 27ம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ள நிலையில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
0
0