பாஜகவைத் தொடர்ந்து தேமுதிக சரிகட்டும் அதிமுக : இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை…!!!

6 March 2021, 2:16 pm
vijayakanth - EPS - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. வன்னியர் உள்ஒதுக்கீட்டை காரணமாக வைத்து பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, முதலில் சுமூகமாக உடன்பாட்டை முடித்தது. இதைத் தொடர்ந்து, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டில் கறார் காட்டி வந்தது.

இதனிடையே, நேற்று 20 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான இடத்தையும் கொடுத்து பாஜகவை அதிமுக சரிகட்டியது. ஆனால், தேமுதிக தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.

மொத்தம் 25 தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், ஆனால் அதிமுக இதனை ஏற்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே, 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களை இடத்தையும் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது. இதனை தேமுதிகவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அதில், இருகட்சியினரும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Views: - 1

0

0