அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது : ஓபிஎஸ் – இபிஎஸ் முக்கிய ஆலோசனை

7 March 2021, 9:52 am
eps ops - updatenews360
Quick Share

தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் முதலமைச்சர் பழனிசாமி – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கும் பணியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. பாமக (23), பாஜக (20) என சுமூகமாக தொகுதி பங்கீட்டை முடித்து விட்டது.

இதனிடையே, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 6 பேரின் பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையின் போது, தேர்தல்பணிகள், வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Views: - 15

1

0