வரும் 28ம் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

18 September 2020, 7:47 pm
eps ops - updatenews360
Quick Share

சென்னை : வரும் 28ம் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத்‌ கழக செயற்குழு கூட்டம்‌ வரும் 28-ம் தேதி திங்கட்‌ கிழமை காலை 9.45 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை,
அவ்வை சண்முகம்‌ சாலையில்‌ உள்ள தலைமைக்‌ கழகத்தில்‌, கழக அவைத்‌ தலைவர்‌ இ. மதுசூதனன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறும்‌.

கழக செயற்குழு உறுப்பினர்கள்‌ அனைவருக்கும்‌ தனித்‌தனியே அழைப்பிதழ்‌ அனுப்பி வைக்கப்படும்‌. உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல்‌ வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில்‌ கலந்துகொள்ள வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌, எனத் தெரிவித்துள்ளார்.