கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அதிரடி நீக்கம் : ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!!

Author: Udhayakumar Raman
30 November 2021, 11:21 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள்‌ குறித்து கழகத்‌ தலைமையின்‌ முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த அ.அன்வர்ராஜா( கழக சிறுபான்மையினர்‌ நலப்‌ பிரிவுச்‌ செயலாளர்‌, முன்னாள்‌ அமைச்சர்‌)இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Views: - 302

0

0