அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா : எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 11:47 am
Sasikala Kalvettu -Updatenews360
Quick Share

பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையான பின்னர் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்து திடீர் திருப்பம் தந்தார். இருப்பினும், சசிகலா அவ்வபோது தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி வந்தார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு சசிகலா தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடர போவதாக தகவல் கூறப்பட்ட நிலையில், நேற்று மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் சசிகலா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, இன்று அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை தியாகராய நகர் எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனிடையே, நினைவில்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு திறக்கப்பட்டது.

அதாவது, எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கொடியேற்றியவர் வி.கே. சசிகலா கழக பொதுச்செயலாளர் என கல்வெட்டு பொறிக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 260

0

0