தேர்தல் நேரம் நெருங்குது… விருப்பமனு வழங்கும் கால அவகாசம் குறைப்பு.. அதிமுகவின் மாஸ்டர் பிளான்..!!!

1 March 2021, 5:25 pm
OPS EPS- updatenews360
Quick Share

சென்னை : அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 3ம் தேதி கடைசி நாள் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்‌நாடு சட்டமன்றப்‌ பேரவை பொதுத்‌ தேர்தல்‌; புதுச்சேரி மற்றும்‌ கேரள மாநில சட்டமன்றப்‌ பேரவை பொதுத்‌ தேர்தல்கள்‌ நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக்‌ கழகத்தில்‌ கடந்த 24.2.2021 முதல்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வேட்பாளர்களாகப்‌ போட்டியிட வாய்ப்பு கோரும்‌ கழக உடன்பிறப்புகளுக்கு
விருப்ப மனு விண்ணப்பப்‌ படிவங்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

ஏப்., 6ம் தேதி அன்று சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தல்கள்‌ நடைபெறும்‌ என்று இந்தியத்‌ தேர்தல்‌ ஆணையம்‌ கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில்‌, கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட வாய்ப்பு கோரும்‌ கழக உடன்பிறப்புகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதி புதன்‌ கிழமை வரை மட்டுமே விண்ணப்பப்‌ படிவங்கள்‌ வழங்கப்படும்‌ என்றும்‌; அவ்வாறு வழங்கப்படும்‌ அனைத்து
விண்ணப்பப்‌ படிவங்களையும்‌ பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌. இக்காலக்கெடு எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 2

0

0