#Corona தனிமைப்படுத்திக் கொண்ட அதிமுக எம்எல்ஏ..! பரபரப்பு…!

6 April 2020, 10:42 am
Feb27_2020_CDC_Coronavirus
Quick Share

சென்னை: தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏ ஒரு தனிமைப்படுத்தப்படுத்தி கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நிற்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது.

மகாராஷ்டிரா முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏ மணிகண்டன், கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

அந்த நபருக்கு கொரோனா உறுதியானதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை தாமதமாக அறிவித்தது. இதையடுத்து, அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏ மணிகண்டன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிகிறது. மொத்தம், 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் என்று  கூறப்படுகிறது.

இருப்பினும் அவரது ரத்த மாதிரியில் இதுவரை அவரை கொரோனா தாக்கவில்லை என்று தெரியவந்திருக்கிறது. ராமநாதபுரம்அதிமுக எம்எல்ஏ ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.