‘அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதேதான் ‘ : பின்குறிப்பு போட்டு கனிமொழிக்கு ‘பல்ப்’ கொடுத்த அதிமுக..!!!

5 February 2021, 5:47 pm
eps- kanimozhi - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை விமர்சித்து கருத்து தெரிவித்த திமுக எம்பி கனிமொழிக்கு, அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது, 12,110 கோடி தமிழக விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழலில், வழக்கம் போல திமுக தலைவர்கள் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்க மனமில்லாமல், விமர்சனங்களை முன் வைக்கத் தொடங்கினர். இதன் ஒருபகுதியாக, திமுக எம்பியும், ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழியும் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால், விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்று ஸ்டாலின் கூறி வந்த நிலையில், அதனை முதலமைச்சர் பழனிசாமி தற்போது நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்தை திமுகவினர் பகிர்ந்து வந்தாலும், ஸ்டாலினை ‘அறிக்கை நாயகன்’ என கனிமொழி குறிப்பிட்டிருப்பது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், ஸ்டாலினை அறிக்கை நாயகன் என விமர்சித்து வரும் நிலையில், அதை உறுதி படுத்தும் விதமாக கனிமொழியின் இந்தப் பதிவு அமைந்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழியின் டுவிட்டிற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்.
பின்குறிப்பு : ( வெற்று அறிக்கைநாயகன் முக ஸ்டாலின் என்ற பட்டத்தை உறுதி செய்த திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு நன்றி.), எனத் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இந்த பதிலை அக்கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 0

0

0