கூட்டுறவு சங்க சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் : அதிமுக கடும் எதிர்ப்பு … பேரவையில் இருந்து வெளிநடப்பு

Author: Babu Lakshmanan
7 January 2022, 12:50 pm
eps - updatenews360
Quick Share

சென்னை : கூட்டுறவு சங்கத்தின் ஆயுள்காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியதும், ரூ. 501.69 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்தார். மேலும், முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்தின் ஆயுள்காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, இந்த மசோதாவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர், உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வழிவகை செய்யும் இந்த மசோதாவை, ஆரம்பநிலையிலேயே எதிர்ப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

Views: - 425

0

1