அமித் ஷாவை அடுத்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் பிரதமர் மோடி..? தீயாய் வேலை செய்யும் அதிமுக கூட்டணி..!

25 November 2020, 8:23 pm
EPS_Modi_UpdateNews360
Quick Share

தமிழகத்திற்கு அமித் ஷா வந்து சென்றதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், அடுத்து பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு விசிட் அடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.

சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணியையும் உறுதி செய்தார்.

கலைவாணர் அரங்கில் அரசு திட்டங்களை துவக்கி வைக்கும் விழாவில் அவர் கலந்து கொண்ட போது, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொள்ள வைக்கப்பட்டதன் மூலம் அவர்களும், பாஜக ஆதரவு மனநிலையில் தான் உள்ளனர் என எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தியும் விட்டார்.

மேலும் மாநில பாஜக நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டே சென்றுள்ளார்.
இந்நிலையில், அமித் ஷா வந்து  தற்போதும் உள்ள நிலையில், அடுத்த அதிரடியாக பிரதமர் மோடியை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக பாஜக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டு விட்டதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியும் தமிழகம் வர சம்மதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் மோடி  திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேதி, நேரம், இடம் போன்றவை இறுதி செய்யப்பட்டு பிறகு இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என ஆளும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ்ஸால் “நவீன கால அரசியல் சாணக்கியர்” என புகழப்பட்ட அமித் ஷா தான், மோடியின் தமிழக பயணத்திற்கு மூல காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளதால், மோடியின் வருகை தமிழகத்தை திக்குமுக்காட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.