அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவு: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி..!!

Author: Aarthi Sivakumar
6 August 2021, 10:04 am
Quick Share

சென்னை: மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனனின் உடல் மருத்துவமனையில் இருந்து அதிகாலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

உறவினர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் ஆறுதல் கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மதுசூதனனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

Views: - 404

0

0