இனி திராவிட முன் ஜாமீன் கழகம் என்றே அழைப்போம்..! திமுக மீது பாய்ந்த மூத்த பத்திரிகையாளர்

23 May 2020, 7:17 pm
Quick Share

சென்னை: ஜாமீனுக்கும், முன் ஜாமீனுக்கும் அலையும் திமுகவை இனி திராவிட முன்ஜாமீன் கழகம் என்று அழைக்கலாம் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அது கடந்த பிப்ரவரி மாதம்…! சென்னை அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி. பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு பிச்சை போட்டதே திமுக தான் என்பது தான் அவர் உதிர்த்த வார்த்தைகள்.

அன்று பேசிய அந்த வார்த்தைகளின் பலன்களை அவர் இப்போது அனுபவித்து வருகிறார் போலும். பட்டியலின மக்களை இழிவுபடுத்தி விட்டதாக அவர் மீது வழக்கு பாய… ஆலந்தூரில் வீட்டில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது. வகையாக ஏதோ ஒரு பிரச்னை கிடைத்தது, தமிழக அரசு மீது அவதூறு கிளப்புலாம் என்று அறிக்கை விட்ட ஸ்டாலினுக்கு சேலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி தந்துவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந் நிலையில், ஜாமீனுக்காக அலையும் திமுகவை இனி திராவிட முன்ஜாமீன் கழகம் என்று அழைக்கலாம் என்று நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.

அவர் தமது பதிவில் கூறி இருப்பது இதுதான்: ஆண்டான் அடிமை காலத்தில் பயன்படுத்தப்பட்டு வழக்கிழந்து போன சமூக நீதிக்கு எதிரான வார்த்தைகளை பேசிவிட்டு ஜாமீனுக்கும் முன்ஜாமீனுக்கும் அலைகிற தி.மு.க-வை இனி திராவிட முன்ஜாமீன் கழகம் என்றே அழைக்கலாமோ.. என்றார்.

அதே போல் மற்றொரு பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை சிவப்பு விளக்கு காரர்கள் என்று கண்ணியமற்ற சொற்களால் ஊடகத்தினரை ஆர்.எஸ் பாரதி கழுவி ஊற்றிய போது கண் சிவக்காதவர்கள் இன்று கைதுக்காக ஏகத்துக்கும் பொங்குவதை பார்க்கும் போது இவர்களது சொரனை கெட்ட தனத்தை நினைத்து சோகப்படத்தான் முடிகிறது என்று கூறி இருந்தார்.

Leave a Reply