இளைஞர், இளம்பெண் பாசறை..! உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அதிமுக முக்கிய அறிவிப்பு

9 August 2020, 11:32 am
ADMK updatenews360
Quick Share

சென்னை: இளைஞர், இளம்பெண் பாசறை, ஜெ, பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கையை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.

அதிமுகவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, ஜெ. பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கையை அனைவரும் விரைவில் முடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை மற்றும்ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர்இளைஞர் அணி ஆகிய அமைப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறும்.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்றுச் சென்று, உறுப்பினர்களை சேர்த்து உரிய கட்டணத் தொகையுடன் தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆகிய அமைப்புகளின் மாநில செயலாளர்கள், துணைநிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டஅணிச் செயலாளர்கள், நாடாளுமன்றம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றம் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் முழுமையாக ஈடுபட்டு உரிய காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 3

0

0