தேர்தலுக்கு அதிமுக தனிப்படை : கலக்க வரும் 47 ஆயிரம் அம்மா வாட்ஸ் அப் குழு!

8 February 2021, 8:01 am
ADMK - Updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. மே மாத மத்தியில்தான் தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறவேண்டும்.

Image result for tn political parties

என்றாலும் கூட முன்கூட்டியே, அதாவது ஏப்ரல் மாத இறுதிலேயே கூட தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் தென்படுகின்றன.

சட்டப் பேரவை தேர்தலுக்காக மூன்று மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து விட்டன.

இதில் முந்திக் கொண்டவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று சொல்லலாம்.

Image result for mnm party

நவம்பர், டிசம்பர் மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் கட்சி மற்றும் பிரச்சாரப் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்க
எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், சீமான் மூவரும் சூறாவளியாய் சுழன்று பல மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டனர்.

அதேநேரம், இந்தத் தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத விதமாக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தற்போது பிரச்சாரம் அனல் பறக்கிறது.

Image result for social websites

குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் பிரசார தளங்களாக பயன்படுத்தி வருகின்றன.

சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்வதில்
அகில இந்திய அளவில் பாஜகவும், காங்கிரசும் முன்னணி வகிக்கின்றன.

Image result for bjp congress

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவுக்கு இணையாக நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியவற்றின் தொழில்நுட்ப பிரிவுகள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு எவ்வித ஆதாரங்களும் தேவையில்லை என்ற நிலை காணப்படுகிறது. அதேபோல் கட்டுப்பாடுகளும் கிடையாது. மேலும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் தகவல்கள் உண்மையானதா? பொய்யானதா? என்பதை கண்டறிவதும் கடினமாக உள்ளது. இதனால் பல நேரங்களில் பொய்யான தகவல்கள் காட்டுத் தீ போல பரவியும் விடுகிறது. இதை பார்ப்பவர்களும் உண்மை என்று நம்பும் நிலை உள்ளது.

இதில் விஷமிகளும் எளிதாக உள்ளே நுழைந்து விடுகிறார்கள். தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது தளத்தின் வழியாக பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மட்டும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் செய்திகள், வீடியோக்கள் தினமும் 2 கோடி முறை பார்க்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த தளங்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரச்சார மேடையாக பயன்படுத்திக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

Image result for stalin video confrernce

திமுகவைப் பொறுத்தவரை அனைத்து இணைய வலைத் தளங்களிலும் தனது பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்த வகை பிரச்சாரங்களில் அதிமுகவும் அதிரடியாக இறங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

Image result for vetri nadai podum tamilagam

அதன் ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் தனது பிரச்சாரத்தை கொண்டு செல்ல அதிமுக முடிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் சுமார் 70 கோடி பேரிடம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இவர்களில் சுமார் 77 சதவீதம் பேர் இன்டர்நெட் இணைப்பு வசதியையும் கொண்டுள்ளனர்.

Image result for vetri nadai podum tamilagam

தமிழ்நாட்டில் 6 கோடிப் பேர் ஸ்மார்ட் போன் வைத்து இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வைத்திருந்தாலும் கூட 4 கோடிப் பேர் தனிப்பட்ட முறையில் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதாவது தமிழக மக்கள் தொகையில் சுமார் 60 முதல் 65 சதவீதம் பேரிடம் ஸ்மார்ட்போன் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களை 4 கோடி வாக்காளர்கள் என்று கூட கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

இதை கருத்தில் கொண்டுதான் அதிமுக தொழில்நுட்ப பிரிவு தற்போது வாட்ஸ் அப் குழுக்களை அதிகளவில் உருவாக்கி ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் அதிமுக சார்பில் 200 வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Image result for aiadmk

அதாவது மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 46 ஆயிரத்து 800 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க அதிமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ‘அம்மா வாட்ஸ் அப் குழு’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

வருகிற 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image result for jayalalitha

இதுகுறித்து அதிமுக தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த மாத இறுதியில் இருந்து அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் மிக வேகமாக இருக்கும். குறிப்பாக அம்மா வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தினமும் குறைந்த பட்சம் 2 கோடி பேரை சென்றடையும் வகையில் தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படும்.

எதிர்க்கட்சியான திமுக கிளர்ச்சி, போராட்டம் என்று மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதிமுகவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், செய்த சாதனைகள் குறித்தும் மக்களுக்கு சுருக்கமாக, நறுக்குத் தெறித்தாற்போல் தகவல்கள் குறும் வீடியோக்கள் பரிமாறப்படும். அம்மாவின் ஆட்சி தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்ற பிரச்சாரமும் இதில் இருக்கும்.

Image result for whatsapp admk

இந்தியாவிலேயே இரண்டாவதாக தமிழக கிராமப்புறங்களில்தான் அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு உள்ளது. அதனால் கிராமப்புற வாக்காளர்களிடமும் அம்மா வாட்ஸ் அப் குழுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் மக்களிடையே ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பார்த்தால் எதிர்காலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்யாமலேயே தேர்தலை சந்திக்கும் நிலைமை உருவாகிவிடும் போல் தெரிகிறது.

அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் இந்த புதிய தொழில் நுட்பத்தை வரவேற்போம்!

Views: - 27

0

0