உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயார் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 7:38 pm
Candidate List - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை – 9, விழுப்புரம் – 24, தென்காசி – 12 காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது.மேலும், வாலாஜாபாத் – 15, உத்திரமேரூர் – 17, ஸ்ரீபெரும்புதூரில் – 12, குன்றத்தூரில் – 18 ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 116

0

0