‘உங்க வண்டி வாங்கி எத்தனை வருஷமாச்சு’…! உடனே மாத்திக்கோங்க… அடுத்த மாதம் வருகிறது மத்திய அரசின் புதிய சட்டம்..!
21 September 2020, 12:20 pmகாற்று மாசுபாட்டை தடுக்கும் விதமாக, பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கான புதிய கொள்கைளை மத்திய அரசு அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது.
உலகளவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காற்று மாசுபடுவதற்கான காரணிகளை கண்டறிந்து, அதில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை ஒழிக்க, வெஹிகிள் ஸ்கிராப்பிங் பாலிஸியை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. அதாவது, 15 ஆண்டுகள் அல்லது அதற்கும் பழமையான வாகனங்களை மாற்றிவிட்டு, புதிய வாகனங்களை வாங்க வழிவகை செய்யும் விதமாக இந்த கொள்கை உருவாக்கப்படுகிறது. மேலும், பழைய வாகனங்களை கொடுத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகைகளும வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய போக்குவரத்துத்துறையும் இந்தக் கொள்கைக்கான வரைவு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் இது குறித்த கேள்விக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் பதிலளித்தாவது :- புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியடையும். அப்போது, தானாகவே புதிய வாகனங்களுக்கான மலிவு 30 சதவீதம் வரை கிடைக்கும். மேலும், காற்று மாசுபாடும் குறையும். பழைய காரை விற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை காண்பித்தால் போதும், புதிய காருக்கான வாகன பதிவு இலவமாக செய்து தரப்படும்.
இந்த வெஹிகிள் ஸ்கிராப்பிங் பாலிஸியின் மூலம் சுமார் ரூ.2.80 கோடி வாகனங்கள் மாற்ற வாய்ப்புள்ளது. பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் மையங்களும் விரிவாக்கம் செய்யப்படும். இதனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், பழைய பொருட்களை மறுசுழற்சி செய்வதால், எஃகு அலுமினியம், பிளாஸ்டிக் போன்ற வாகன பாகங்கள் மலிவாகக் கிடைக்கும்.
கொரோனா காலத்தில் மத்திய அரசின் இந்தக் கொள்கை, பொருளாதாரத்திற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.