பாசனத்திற்காக வரும் 7ம் தேதி முதல் அழியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு

Author: Babu
5 October 2020, 4:40 pm
aliyar dam water - updatenews360
Quick Share

கோவை : பாசனத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து 7-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு அக்.,7ம் தேதி முதல் 80 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதன்மூலம்பொள்ளாச்சி, ஆனைமலை வட்டங்களில் 22,216 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 42

0

0