இனி சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

4 September 2020, 10:53 am
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, முக்கிய துறைகள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கி வந்தன. இதனால், பெரும்பாலான அலுவல் பணிகள் முடங்கி போயுள்ளன.

இதனிடையே, கடந்த 1ம் தேதி முதல் அனைத்து அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்கள் உள்பட தனியார் அலுவலகங்களும் முழு ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் வரும் டிசம்பர் மாதம் வரையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Views: - 0

0

0